
மாணவர்களான உங்களுக்கு முக்கியமானது எது?
நன்றாக படித்தால் நீங்கள் நினைத்தபடி வேலையைத் தேடி கொள்ளலாம். நல்ல வேலை கிடைத்தவுடன் நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது, பொதுவாக கிராமத்தில் உள்ளவர்களுக்கு 50 வயது தாண்டினால் தான் தொப்பை வரும், ஆனால் இன்றோ ஐந்தாவது படிக்கும்போதே சிறுவர்களுக்கு தொப்பை வருகிறது! உடல் நலத்தில் ஆர்வம் காட்டுங்கள்! சில மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் ஜூரம் வந்துவிடும்… எதனால் அப்படி ஆகிறது? பயம் ஒரு காரணமயிருந்தாலும்கூட உடலில் எதிர்ப்பு சக்தி முழுமையாக இல்லை என்பதுதான் முக்கியமான உண்மை.

மாணவர்கள் நினைத்தால் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க முடியும். பதங்கம் வாங்கினால் உங்கள் பெற்றோர்கள் சந்தோஷப் படுவார்கள் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லுவார்கள்… இந்தியாவிற்கு பதக்கங்கள் வாங்கித் தாருங்கள். உங்கள் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

