
என்னைச் சந்திக்க வருபவர்களின் சராசரி வயது டீன் ஏஜாக இருப்பது எனக்கு உண்மையிலேயே சந்தோஷம் தருகிறது. அவர்களோடு இருக்கும்போது நானும் இளமையாக உணர்கிறேன். ஆனால், என்னிடம் வரும் இளைஞர்களில் சிலர் சொல்லும் வார்த்தைகள்தான் வேதனை தருவதாக இருக்கிறது. இன்று உடற்பயிற்சி செய்தீர்களா என்று கேட்டால், ஸாரி சார்… எழுந்திருக்க முடியலை… உடற்பயிற்சி செய்யலை என்பதுதான் பதிலாக வருகிறது. இந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்க அடிக்கடி தவறுகிறார்கள். அதுவே, வேண்டாத சில பழக்கங்களைப் பற்றிக் கேட்டால் ஸாரி சார்… விடமுடியலை என்கிறார்கள். நல்ல பழக்கங்களை நாம் தொடுவதில்லை.

கெட்ட பழக்கங்கள் நம்மை விடுவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது நிலைமை. எனக்கு மிகவும் கவலை தருவதாக இருப்பது இளைய தலைமுறையின் குடிப்பழக்கம்தான்.சென்னையில் இருந்தபோது எங்கள் துறையிலேயே குடிப்பழக்கத்தில் இருந்த 100 காவலர்களை மீட்டுக் கொண்டு வந்தோம். இளைஞர்களே… நம் இலக்கு இதுவா…யோசியுங்கள்!

