
ஆசைப்பட்டால் போதுமா?
ஆடையில்லாத மனிதன் மட்டுமல்ல… ஆசையில்லாத மனிதனும் அரைமனிதன்தான். ஆசைதான் ஒரு மனிதனை வளர்த்து எடுக்கிறது. அதனால் இளைஞர்களே… நிச்சயமாக நீங்கள் ஆசைப்படுங்கள்… எதிர்காலத்தில் என்னவாக வேண்டுமோ அதற்காக ஆசைப்படுவதில் தப்பே இல்லை.
ஆனால், வெறுமனே ஆசைப்படுவதோடு நின்றுவிட்டால் ஆசை நிராசையாகிவிடும். உங்கள் ஆசைக்கு செயல்வடிவம் கொடுங்கள். ஆசை என்பது கற்பனையை மட்டுமே வளர்க்கும்… அதுவே முயற்சி செய்தால் மட்டுமே ஆசைப்பட்ட எதிர்காலத்தைத் தொடமுடியும்.

ஆசை முக்கியம் அதற்கான முயற்சியில்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறியாகவிடும். ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் ஆசையிருக்கும், அப்படி ஆகவேண்டும், இப்படி ஆக வேண்டும் என்று. அந்த ஆசையை அடைய இளமையிலிருந்து உழைக்கத் திட்டமிடுங்கள்,
உங்களுக்குள் இருக்கும் உள்வளத்திறமையை(Interpersonal skills) வளர்க்க நிறைய நல்ல புத்தங்களை படிக்க பழகுங்கள். படித்த விஷயங்களை நடைமுறையில் கொண்டு வாருங்கள். எந்த வேலையாகயிருந்தாலும் அதன் நுட்பங்களை (techniques) கற்றுக் கொள்ளுங்கள், அதற்காக உழைக்க தயாராகுங்கள்… முயற்சி செய்தால் நீங்கள் பணக்காரன் ஆகலாம், ஐ.ஏ.எஸ் ஆகலாம், ஐ.பி.எஸ், ஆகலாம். நீங்கள் என்னாவாக விருப்புகிறீர்களோ அதுவாகவே ஆகலாம். எனவே, முயற்சி செய்யுங்கள்!