சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளைவிட அதிகம் சம்பாதிக்கிறார்களே..?
சம்பாத்யம் என்று எதைச் சொல்கிறீர்கள்… பணத்தையா..? இருக்கலாம். ஆனால், மக்கள் மத்தியில் மரியாதை, சேவைக்குக் கிடைக்கும் அங்கீகாரம், இக்கட்டான சூழ்நிலைகளில் பல உயிர்களைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைப்பது, உழைப்பின்மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தி இதெல்லாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் நிறையவே கிடைக்கிறது. இப்போது சம்பளமும் ஓரளவுக்கு அதிகரித்திருக்கிறது.
ஆக, எந்த வேலையாக முழு மனதோடு செய்தால் நிச்சயமாக நிறைவைத் தரும். எது நிறைவைத் தருகிறது என்று முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்!