English     
     Tamil         
நீங்கள் கேட்பவை

உங்கள் வேலையும் குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறீங்க?

அலர்ட்டாக இருக்க வேண்டியதெல்லாம் அவசர கால நேரத்தில்தான். மற்ற நேரங்களில் எல்லோரையும் போல எட்டுமணிநேர வேலைதான். பொதுவாக எல்லோருமே எட்டு மணி நேரம் வேலை செய்கிறோம்… எட்டு மணி நேரம் தூங்குகிறோம்… அப்படியும் நம் கையில் எட்டுமணி நேரம் மீதமிருக்கிறது. அதை குடும்பத்துக்காக முழுமையாகச் செலவிடலாம். என்னைப் போன்ற எமர்ஜென்ஸி பணியில் இருப்பவர்களுக்கு இந்த தூங்கும் நேரம் ஓய்வு நேரத்தையும் வேலை எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும். அதனால், குடும்பத்தோடு செலவிடும் நேரத்தை முழுமையாகச் செலவிட வேண்டும். அதிக நேரம் செலவிடுதலைவிட அவர்களோடு அந்நியோன்யமான நேரத்தைச் செலவிடுவதுதான் சரியாக இருக்கும்.

அப்படி இரண்டு மணிநேரம் கிடைத்தாலும் பிள்ளைகள் உற்சாகமாக இருப்பார்கள். என்னுடைய தினப்படி வேலையான வாக்கிங் செல்வதை மனைவியோடு செல்வேன். அப்போது குடும்ப விஷயங்களைப் பேசிக் கொள்வோம்.
எல்லா கடிகாரங்களிலும் 24 மணி இருக்கிறது. ஆனால், அதற்கான திட்டம் நம் கையில்தான் இருக்கிறது.

Q

UESTIONS

Name
Email
Phone
Question