எங்கே நேரம்
உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் பின்னர் ஒருநாள் மருத்துவமனைக்குச் செல்ல நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.
-எட்வர்டு ஸ்டேன்ஸி.
நான் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன். எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்கிறார்கள் சிலர். பிஸியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான். மன அழுத்தம்(stress), மனச் சோர்வு(depression) போன்ற மனநோய்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி பிஸியாக இருப்பதாகும். பிஸியாக இருப்பவர் யார்? எல்லா பணிகளையும் செய்து முடிப்பவரைத்தான் பிஸியானவர் என்று கூற முடியும். “A busy man is one who finds time for everything”.

எனவே ஒருமணி நேரம் உடற்பயிற்சி என்று கடமையை நிறைவேற்றும் மனிதனே தன்னை பிஸியானவர் என்று கூறிக்கொள்ள முடியும்.உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும்கூட அன்றாட வேலைகளைக் கவனிக்கும்போதுகூட உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அதற்கு சில யோசனைகள்.
அ. பஸ் நிலையத்திலோ, இரயில் நிலையத்திலோ காத்திருக்கும் நேரத்தில் நிற்பதற்கு பதில் நடக்கலாம்.
ஆ. ஞாயிற்றுக்கிழமையில் பிஸியாக இருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் குடும்பத்துடன் ஒரு நீண்ட நடப்பயணம்(5கி.மீ) செல்லலாம்
இ. கோயிலுக்கோ சினிமா அரங்கிற்கோ நடந்தே போகலாம். வரும் போது ஆட்டோவில் வந்து சேர்ந்துவிடலாம்.
ஈ. வீட்டிற்கு வெளியே சென்று நடக்கவோ, ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யவோ வசதி இல்லை என்றால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். இரவு உணவுக்குச்சற்று முன்னர் கூட உடற்பயிற்சி செய்யலாம்.