
மனநலமும் உடல்நலமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். மனநலம் நன்றாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்க முடியும். உடல்நலம் நன்றாக இருந்தால்தான் மனநலம் நன்றாக இருக்கும்.
உடல்நலம் கெடுவதால் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட, குறித்த நேரத்தில் உணவு உண்ண மாட்டார்கள். தொடர்ந்து சோகமாக இருப்பதால் உடலில் வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நோய் வருகிறது. இந்தவிதமான நோய்களை Psycho-somatic Disorder என்று அழைக்கின்றனர்.

மனநோய் எதனால் ஏற்படுகிறது? நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டே இருப்பது. வேறு எதையும் நினைக்காமல் இருப்பது. இன்னும் சொல்லப் போனால் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. சிலர் காலப்போக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணம் கவலை. நாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் கவலை ஏற்படுகின்றது.
தினமும் கல்லூரியிருந்து வந்தவுடன் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் மாணவனுக்கும், அலுவகத்திலிருந்து விளையாட்டு அரங்கத்திற்குச் செல்லும் ஊழியருக்கும் கவலைப்பட நேரம் இல்லை. வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மனநலம் கெட்டுப்போக வாய்ப்பே இல்லை என்பதுதான் எனது முடிவான கருத்து.