
உணவே மருந்து!
உடல்நலத்தைக் காப்பது எது? என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்றால் அதற்கு “உணவு” என்றே பதில் சொல்லுவேன். இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள் என்றால் “அளவான உணவு” என்று பதில் கூறுவேன். இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்தான் ஒரு மனிதனுடைய முழு ஆரோக்கியமும் இருக்கிறது.

எந்த மருத்துவரிடம் சென்றாலும் நம்முடைய நோய்க்கு முதல் காரணமாக அவர் சொல்வது நம் உணவுப்பழக்கத்தைத்தான். அதற்கான தீர்வாக இருப்பதும் அதே உணவுப் பழக்கம்தான். அளவான உண்பது… சரியான உணவு முறைகள் போன்றவையே ஒருவனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே என்ன உண்கிறீர்கள் என்பதும் எப்படி உண்கிறீர்கள் என்பதும் ரொம்ப முக்கியம்!

