
வாய்விட்டுச் சிரிக்கலாம்!
சிரிப்பு, நம்மில் பலரும் மறந்து போன உணர்வு. இயல்பிலேயே சிரிக்க மாட்டார் என்று சிலரைப் பற்றிச் சொல்வார்கள். அப்படிச் சொல்பவர்கள் இந்த புள்ளிவிவரத்தைப் பாருங்கள்! குழந்தைஒரு நாளில் 400 முறை சிரிக்கிறது. பருவ வயதை எட்டியவர்கள் 17 முறைசிரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் சொல்லமுடியும் இயல்பிலேயே சிரிக்க மாட்டார்கள் என்று! நாம் தொலைத்த சிரிப்பை மீட்டெடுக்க வேண்டும்.

சிரிப்பதன் மூலம் கோபத்தோடு வருபவரைக்கூட சாந்தப்படுத்திவிட முடியும். சிரித்த முகமாக இருந்தால் நம்மிடம் எளிதாகப் பழகுவார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால்கூட சிரிக்கும்போது நமது முகத்திலுள்ள இறுகிய தசைகள் தளர்கின்றன. வாய்விட்டுச் சிரிக்கும்போது இழுக்கும் ஆழ்ந்த சுவாசம் நுரையீரலைவிரியச் செய்கிறது. இதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளிழுக்கப்படுகிறது. சிரிக்கும் போது நமது மூளையில் என்ற திரவம் கரக்கிறது. இது நம்மை அதிக நேரம் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்கிறது. மன அழுத்தம் நீங்கிவிடுகிறது.
இதையெல்லாம் விடுங்கள்… விலங்கில் இருந்து நம்மைப் பிரித்துக் காட்டும் முக்கியமான விஷயம் சிரிப்பு. எந்த விலங்கும் சிரிப்பதில்லை. நாம் சிரிப்போம்!

