உணவுக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். தற்போது உண்ணும் உணவை விட குறைவான உணவோடு நிறுத்திக் கொள்ள சுயகட்டுப்பாடு வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தைரியம் வேண்டும். “ஒரே ஒரு கடலையுடன் நிறுத்திக் கொள்பவரை விட தைரியசாலி யாருமில்லை” (Nobody is more courageous than a man who can stop with one peanut) என்பது இங்கிலாந்து நாட்டு பழமொழி. அந்த சுயக்கட்டுப்பாடும் தைரியமும் உங்களுக்கு உண்டு. இல்லையெனில் இப்புத்தகத்தை இதுவரை படித்திருக்க மாட்டீர்கள். உங்களால் சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து அளவாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அளவான உணவு என்னும் ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறேன். இந்திய நாடு வளரும் நாடுகளில் ஒன்று. உண்ண உணவில்லாமல் இலட்சக்கணக்கான மக்கள் தவிக்கும்போது, அவர்களைப் பற்றி கவலைப்பட்டு, அவர்களிடம் குறைவாக உண்ணுங்கள் என்று சொல்ல ஒரு புத்தகம் வேண்டுமா என்று சிலர் கேட்க்க்கூடும்.
இந்தியாகவில் 30சதவீதம் மக்கள் அதிக எடை உள்ளவர்களாகவும், 12 சதவீதம் பேர் நோய்வாய்ப்படும் அளவிற்கு உடல் பருமன் உள்ளவர்களாகவும் உள்ளனர். அதே வேளையில் போதிய உணவு இன்றி மூன்று வேளை உணவிற்குத் தவிப்பவர்கள் இந்தியாவில் 12 சதவீத்த்தாருக்கு உணவு கொடுக்க முடியும். ஆக, அதிக உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டியது ஒரு தேசிய அவசியம் ஆகும்.
அதிக உணவு உண்பதினால் ஏற்படும் ஆபத்தையும், அளவான உணவு உண்பதின் மகத்துவத்தையும் விளக்கிவிட்டேன். உண்ண வாழ்கிறோமா அல்லது வாழ உண்கிறோமா என்கிற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல்நலம் காப்பதில் உணவுக்கு இணையான ஒன்று உண்டென்றால் அதுதான் உடற்பயிற்சி.