தியானம் செய்யும் போது முழுக்கவனத்தையும் ஒரு வார்த்தையில் அல்லது ஒலியின் மீது வைத்துக்கொண்டிருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு பாட்டைக் கேட்கும் போதுகூட மனது அப்பாட்டிலிருந்து விலகி வேறு எங்கோ போய்விடுகிறது. தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபட்டால்தான், மனதை கட்டுப்படுத்த முடியும். கட்டுபாடுள்ள மனதால்தான் ஒரு செயலில் தொடர்ந்து ஈடுபட முடியும். சாதனைகளையும் படைக்க முடியும்.முழு ஈடுபாட்டோடு முயற்சி செய்தால்தான் மனதினை ஒருநிலைப்படுத்த முடியும். தியானம் மூலம் ஒருநிலைப்படுத்தி பழக்கப்பட்ட மனத்தால் அதாவது பண்பட்ட சுயக்கட்டுப்பாடுள்ள மனத்தால் உண்ணும் உணவின் மீது முழுக்கவனம் செலுத்தி இயலாத மனதாக இருந்தால், குறைந்த நேரம் மட்டும் உணவில் கவனம் இருக்கும்.

எனவே, போதுமான உணவு உண்ட போது கூட உணவு உண்ட திருப்தி இருக்காது. இதனால் அதிகமாக உணவு உண்ண வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தியானப்பயிற்சி மாணவர்களுக்குப் பாடங்களில் முழுக்க கவனத்தையும் செலுத்த உதவுகிறது.45 நிமிடங்கள் பாடம் நட்த்தும் ஆசிரியரின் உரையைக் கூர்ந்து கவனித்தால் பாடமானது மனதில் பதிந்து விடுகிறது. அதை மீண்டும் டியூசனுக்குச் சென்று படிக்க வேண்டியதில்லை. மனதில் இப்படி முழு கவனத்துடன் பதியவைத்த பாடம் பின்னர் எளிதில் ஞாபகத்தில் வருகிறது.
எந்தவொரு செய்தியையும் மனதில் பதிவு செய்யப்படாதவரை அதைத் திரும்ப நினைவு கூற முடியாது.