
ஒருவருக்கு கண்வலி வந்தால் பின்னர் மற்ற அனைவருக்கும் தொற்றிக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்கள். அதைப்போல ஜலதோஷம் மற்றும் வைரஸ் காய்ச்சல். இவை அனைத்தும், தொற்றுநோய்கள் ஆகும்.

நாம் சுகாதாரமாய் இருப்பதாலும் நோய்கண்ட ஒருவருக்கு அருகில் போகாமல் இருப்பதாலும் இது போன்ற தொற்று நோய்களைத் தவிர்த்துவிடலாம். நோய் கண்டவர் ஒருவர் உங்கள் அருகில் வந்து தும்மின்னாலே அவரது நோய் உங்களைத் தொற்றிக்கொள்ளும். தொற்றுநோய் வந்தவர் அருந்திய தண்ணீர் குவளையில் நாம் தண்ணீர் அருந்தக்கூடாது என்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை நம்மில் பலர் பின்பற்றுவதில்லை. சமீபத்தில், ஒரு திருமண மண்டபத்தில், கை அலம்பியதும் ஒருவர் தனது கைக்குட்டையைக் கொடுத்து உதவுகிறார்கள் ஆனால், இப்பழக்கம் மிகப் பெரிய சுகாதாரக்கேடு ஆகும். மற்றவர்கள் கைகுட்டையில் நாம் கை துடைக்க்க் கூடாது. உணவினைக் கூட கையால் அள்ளி மற்றவர்களுக்குப் பரிமாறக்கூடாது. தொற்றுநோய்ப்பரவ இதைவிட எளிதான வழிவேறு இல்லை.