English     
     Tamil         
 
 
ரகசியங்கள்

என்னருமை மாணவர்களே… உங்களிடம் சில ரகசியங்களைச் சொல்லவிரும்புகிறேன்!
நீங்கள் கல்லூரியில் மாணவராக படிப்பதே பெரியசந்தோஷமான விஷயம். கடந்த ஆண்டு +2வில் மொத்தம் 7லட்சம் மாணவர்கள் படித்தார்கள்.அதில் 6லட்சம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள். 1 லட்சம் மாணவர்கள் தோல்வியைச் சந்தித்தார்கள். வெற்றி பெற்ற 6 லட்சம் மாணவர்களும் கல்லூரில் சேரவில்லை. ஏன்…அவர்களுக்கு ஆசையில்லயா? ஆசையிருந்தாலும் பலருக்கு படிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு படிக்க வசதியில்லை.கெட்ட பழக்கங்கள் நம்மை விடுவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது நிலைமை. எனக்கு மிகவும் கவலை தருவதாக இருப்பது இளைய தலைமுறையின் குடிப்பழக்கம்தான்.

சென்னையில் இருந்தபோது எங்கள் துறையிலேயே குடிப்பழக்கத்தில் இருந்த 100 காவலர்களை மீட்டுக் கொண்டு வந்தோம். இளைஞர்களே… நம் இலக்கு இதுவா…யோசியுங்கள்!

உங்கள் பெற்றோர் உங்களை படிக்க வைக்க ஒரு நாளுக்கு உங்களுக்கு 500 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதை நினைத்துப்பார்க்க வேண்டும். இன்று நாம் என்ன கற்றுக் கொண்டோமென்று தினம் தினம் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்லூரிக்குப் போனோமே… என்னச் செய்தோம் என்று உங்களை நீங்களேகேள்விக் கேளுக்கள் அப்போதுதான் சாதிக்க முடியும்.
கல்லூரியில் கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள், வெறும் சான்றிதழ் வாங்க, வேலை கிடைக்குமென்று போகவேண்டாம். அறிவை வளர்க்கப் படியுங்கள் திறனை வளர்க்க உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள், உங்கள் மனப்பான்மையை வளர்க்க திட்டமிடுங்கள்.
கல்லூரியில் சும்மா டைம் பாஸ்க்கு போனால் வேலையே கிடைக்காது. உங்களிடம் ஆங்கிலம் பேசும் திறனில்லை எனில், வேலைக்கேற்ற திறனில்லை எனில் நீங்கள் கல்லூரியில் அதிகமதிப்பெண் எடுத்தும் பயனில்லை.
அதனால், படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்!

 
Youngsters
  • உங்கள் குழந்தைகளை விளையாட்டில் அக்கறை காட்டுங்கள்.
  • ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கித் தாருங்கள்!
  • அன்னையும் பிதாவும்..!
  • ஆசைப்பட்டால் போதுமா
  • எது முக்கியம்
  • குறைந்த முயற்சி
  • ரகசியங்கள்
  • இளைஞர்களுக்கு
  • என்னைச் சந்திக்க
  •