English     
     Tamil         
 
 
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கித் தாருங்கள்!

அம்மா, அப்பா பிள்ளைகளுக்கு தரும் முக்கியமான சொத்து உடல்தான்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கியத்தோடு பெற்றோரால் வழங்கப்படும்
இந்தச் சொத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான இலக்கை
அடைகிறார்கள். சிலர் உடல் உழைப்பைக் கொட்டி கோடீஸ்வரன் ஆகிறார்கள்…
சிலர், மூளையை மூலதனமாக்கி விஞ்ஞானி ஆகிறார்கள்… கடும் பயிற்சி எடுத்து
படித்து சிலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பதவிகளை அடைகிறார்கள்!
யார் எந்தத் துறைக்குச் சென்றாலும் உடலைப் பேணுவது என்பது முக்கியம்.
நீங்கள் போலீஸ் ஆக வேண்டுமென்றாலோ அல்லது போலீஸ் ஆனாலோதான் உடற்பயிற்சி
செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை…

நீங்கள் ஐ.டி. ஊழியராக இருந்தாலும் உடற்பயிற்சி அவசியம்.அதனால் இளைஞர்களே… இப்போதிருந்தே தயாராகி விடுங்கள்… படிக்கச்
செல்வதற்கு முன்போ… அல்லது விடியற்காலையிலோ விளையாடுவதை கட்டாயமாக்கிக்
கொள்ளுங்கள் இதனால் உடல் கட்டுக்கோப்பாக இருப்பது மட்டுமல்ல… அவசியமற்ற
எண்ணங்களிலிருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள்… எந்தச் சூழ்நிலையில்
இருந்தாலும் விளையாட்டு உங்களை உற்சாகப்படுத்தும். உங்களுக்கு எது
பிடித்தமான விளையாட்டோ, அதில் நீங்கள் தகுதியானவராக ஆக வேண்டும்.
இந்தியா கடந்த ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்றோ இரண்டோ தங்க பதக்கம் தான்
வாங்கியது! ஆனால் சீனா 120 தங்க பதக்கங்கள், அமெரிக்கா 110 தங்க
பதக்கங்கள், எது? பெரிய நாடு, என் நம் நாட்டு இளைஞர்கள் வலிமையற்றவர்களா?
விளையாட்டை உங்கள் பொழுதுபோக்காக ஆக்கிக் கொள்ளாமல் உங்கள்எதிர்காலமாக்கி கொள்ளுங்கள் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வாங்கி
தாருங்கள்….
 
Youngsters
  • உங்கள் குழந்தைகளை விளையாட்டில் அக்கறை காட்டுங்கள்.
  • ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கித் தாருங்கள்!
  • அன்னையும் பிதாவும்..!
  • ஆசைப்பட்டால் போதுமா
  • எது முக்கியம்
  • குறைந்த முயற்சி
  • ரகசியங்கள்
  • இளைஞர்களுக்கு
  • என்னைச் சந்திக்க
  •