English     
     Tamil         
 
 
அன்னையும் பிதாவும்..!

அன்னையும் பிதாவும்..!

சிந்தித்து செயல்படுவது நல்லது மட்டுமில்லை… புத்திசாலித்தனமும்கூட! பொதுவாக உங்களுக்கு கல்வி கற்றுத்தருபவர் உங்கள் ஆசிரியராக இருக்கலாம், ஆனால் உங்களின் எதிர்க்காலத்திற்காக, உங்கள் வாழ்வு ஒளிமயமாகயிருக்க வேண்டுமென்பதற்காக, தன் வாழ்வையே அர்பணித்து வாழும் உங்கள் பெற்றோர் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள். சமீபத்தில் நான் கடந்து வந்த ஒரு நிகழ்வு என்னை நெகிழ வைத்துவிட்டது.சமீபத்தில் விழாவுக்காக நான் ஒரு இன்ஜினியரிங் கல்லூரிக்குப் போயிருந்தேன் ஒரு பெண் என்னை சந்திப்பதற்காக தன் ஆசிரியரிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தாள். அதை கவனித்த நான் அவளை அழைத்து என்னவென்றுக் கேட்டேன்.

எனக்கு 5,000 ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டாள். எதற்கு என்று கேட்டபோது, காலேஜ் ஃபீஸ் கட்டவேண்டும் அதற்காகத்தான் சார்… என்று சொன்னாள்.பொதுவாக இப்படிப்பட்ட கோரிக்கையோடு வரும் மாணவர்களை நான் தவிர்ப்பது இல்லை. ஒரு கான்ஸ்டபிளை அழைத்து அவள் பெற்றோரை அழைத்து வரச் சொன்னேன். அவளுடைய அம்மா மட்டும்தான் வந்தார். ‘ஐயா… என் கணவன் ஒரு குடிக்காரன், நான் கூலித் தொழிலாளி… என் மகள் படிப்பிற்காக 5,000 ரூபாய் வேண்டும் சார்…’ என்று கேட்டார். அந்தக் கண்களில் உண்மை தெரிந்தது.
‘இன்ஜினரிங் படிக்க 5,000 ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்? என்று கேட்டேன்… இல்ல சார்… பலரிடம் கேட்டிருக்கேன்… கூடவே லோன் கிடைக்கும்-னு நம்புறேன் சார்… என் உயிர் இருக்கும் வரைக்கும் எப்படியாவது என் மகளை படிக்க வைப்பேன் சார் என்று அந்த அம்மா சொன்னபோது அவர் கண்கள் குளமாகி விட்டது. தனக்கு ஒரு கஷ்டம் வந்தால் கூட பரவில்லை தன் குழந்தை நன்றாகயிருக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமே வரும்… சிந்தியுங்கள் மாணவர்களே!

 
Youngsters
  • உங்கள் குழந்தைகளை விளையாட்டில் அக்கறை காட்டுங்கள்.
  • ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கித் தாருங்கள்!
  • அன்னையும் பிதாவும்..!
  • ஆசைப்பட்டால் போதுமா
  • எது முக்கியம்
  • குறைந்த முயற்சி
  • ரகசியங்கள்
  • இளைஞர்களுக்கு
  • என்னைச் சந்திக்க
  •