உங்களை கவர்ந்த மனிதர்களைப் பற்றி சொல்லுங்கள்?
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே வழியில்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து முன்னேறி சாதனை படைக்கும் மனிதர்கள் என்னை கவரக் கூடியவர்கள். அதுபோல ஏராளமான மனிதர்கள் நம் நாட்டில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல உயரத்தை அடைந்தும் சாதித்தும் கூட இன்றும் ஏளிமையாக வாழ்பர்கள் பலர், அதற்கு உதாரணமாக ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள், அவர் விஞ்ஞானியாக இருந்தபோதும் சரி அவர் குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி அவர் மக்களை அணுகும் முறையும், அவரின் எளிமையான வாழ்க்கையும் என்னை பிரமிப்படையச் செய்தன. அவரைப் போலவே வாழ முயற்சிச் செய்கிறேன்.