
” வெற்றியை போல் வெற்றியை பின்தொடர்வது எதுவுமில்லை – டூமாஸ் ”
நீங்கள் ஒரு தேசியப்படை (NCC) மாணவராய் இருந்திருக்கலாம் அல்லது ஓர் இந்திய காவல் பணி அதிகாரியால் ஆர்வமூட்டப்படிருக்கலாம். அதே வேளையில், இந்திய காவல் பணியில் சேர்வதற்கான வழிமுறைகளை அறியதவராகக் கூட இருக்கலாம். உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கப் போகிறது இந்த நீங்களும் ஓர் I.P.S. அதிகாரி ஆகலாம் நூல்!I.P.S. அதிகாரியாக அடிப்படைத் தகுதி என்ன, அதற்கான போட்டித் தேர்வு எது, அதற்கு எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்வது போன்ற பல வினாக்களுக்கு பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
இந்த நூலின் நோக்கமே I.P.S. ஆவதற்குரிய போட்டித் தேர்வு மிகக் கடுமையாக இருக்குமோ என்ற அச்சம், இவ்வாறான தேர்வுகள் மேல்தட்டு இளைஞர்களுக்கும், பண வசதியும் அரசியல் பலமும் உடையவர்களுக்கும் உரியன என்ற எண்ணம் போன்றவற்றை உடைத்து உங்களை இந்தத் தேர்வை எழுதத் தூண்டுவதுதான்!இளமைபருவத்தில் வீரதீரமிக்க சவால் நிறைந்த பணியைத் தேர்ந்தெடுக்க நினைத்தவரா நீங்கள்… ஒரு பணியைத் தெரிந்தெடுத்து, அதன் மூலமாக சாதனை நிகழ்த்தி மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடிக்க எண்ணியவரா நீங்கள்… மாபெரும் சக்தியாக உருவெடுத்து, தீமையை அடியோடு அகற்றி நல்லவற்றை, நல்லவர்களைக் காப்பாற்ற ஆசை கொண்டவரா நீங்கள்… அப்படியானால் நீங்கள் I.P.S.ஆகத் தகுதியானவர்தான். அதற்கு இந்த நூல் சரியான வழிகாட்டியாக இருக்கும்.
இந்த நூலில் உள்ள கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கும்போது, IPS தேர்வு மிக எளிமையானது என்பதை உணர்வீர்கள். திட்டமிட்டு உழைத்தால், இந்திய காவல் பணியில் (IPS) சேர்ந்துவிட முடியும். இப்பணிக்குத் தேர்வு என்பது திறமையின் அடிப்படையில் மட்டுமே செய்யபடுகிறது. பெரிய சமூக அந்தஸ்தோ, பொருளாதார பின்பலமோ தேவையில்லை; ஆங்கில வழிபடிப்பு என்று கூட எதுவும் அவசியமில்லை. தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்களும், நேர்காணலின் பொது நீங்கள் விடைசொல்லும் பாங்குமே தேர்வு பெறுவதற்கு அடிப்படையானது.
IAS (Indian Administrative Service) மற்றும் IFS (Indian Foreign Service) அதிகாரியாக ஆர்வம் உள்ளவர்களும் இந்நூலைப் படிக்கலாம். ஏனெனில் IAS,IPS,IFS போன்ற பதவிகளுக்கு பொதுவாக தேர்வு ஒன்றேயாகும்.
வாழ்த்துக்கள்!